தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச. மாடசாமி. பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா. மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யேகமான மெல்லிய நகைச் சுவையோடும், ஆழத்தை எளிதில் வெளிக்காட்டாத எளிய சொல்லாடலோடும் விளக்காட்டாத எளிய சொல்லாடலோடும் விளக்குகின்றார்.
இன்றைய புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியருக்கே மிகப்பெரும் பங்கு உள்ளது.. ஒவ்வொரு மாணாக்கர்களையும் புதிய முறையில், புதிய உத்திகளின் வழியாக வழிநடத்தி செல்வது பற்றி விவரித்திருப்பது மிக மிக அழகாக உள்ளது..இந்த புத்தகம், ஆசிரியர்களை அவர் உள்ளத்தின் ஆழம் வரை சென்று, சிந்திக்கச் செய்து அவரவர்களின் கடமையை, பங்கை மிகச்சிறப்பாக செய்ய ஏதுவாக இருக்கும்💜💕🎉💐