ஷாருக்கான் எனும் மந்திர வார்த்தைக்கு மயங்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. அதுவும் பாலிவுட் திரைப்படங்களை ரசிப்பவர்களுக்கு இந்தப் பெயர் வசீகரக் காந்தம். மனதுக்குள் உற்சாகத்தின் மழையையும், சிலிர்ப்பின் வெயிலையும் ஒரு சேரக் கொளுத்தும் பெயர் இது. இந்தியாவின் எல்லைகளையெல்லாம் கடந்தும் இந்தப் பெயருக்கு நினைத்துப் பார்க்க முடியாத மயக்கம் இருக்கிறது. வெளிநாடுகளில் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் ஒரு இந்தியத் திரை நட்சத்திரம் ஷாருக்கான். அதிலும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் இவருடைய படங்களுக்காக ரசிகர்கள் அதிகாலையிலேயே காத்திருக்கும் அதிசயங்கள் நடக்கின்றன. பூஜை போடும் முன்பாகவே விற்றுத் தீர்ந்து விட