மஹாபாரதத்தின் ஆதிபர்வ உபபர்வமான ஆஸ்தீக பர்வத்தில் வரும் இந்தக் கதையைக் கேட்பவனும், படிப்பவனும், உரைப்பவனும் நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கருடனின் அருஞ்செயல்ளை ஒப்பிப்பவன் பெறற்கரிய நற்பேறுகளைப் பெறுவான் என்று இந்தக் கதையின் முடிவில் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. கருடன் என்றால் பெருஞ்சுமையைச் சுமப்பவன் என்பது பொருளாகும். கசியபர் மற்றும் வினதைக்குப் பிறந்த இரண்டாம் மகனுக்கு வாலகில்ய முனிவர்கள் சூட்டிய பெயரே கருடன் என்பதாகும். உபநிஷத்துகளில் கருடோபநிஷத்தும், புராணங்களில் கருட புராணமும், படையணிவகுப்புகளான வியூகங்களில் கருட வியூகமும் இவனைக் காரணமாகக் கொண்டே உண்டானவையாகும். வேதங்களில் இவனே சியேனன் என்ற பெயரில் குறிப்பிடப்படுக