இந்த வருடத்தில் நான் முடிக்கும் 43ஆவது புத்தகம்.
புத்தகத்தின் பெயர்: ராணி மங்கம்மாள்
எழுதியவர்: நா. பார்த்தசாரதி
ஒரு சரித்திர நாவல் என்றால் எப்படி இருக்கவேண்டும், எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கும், வரலாற்றின் சம்பவங்களை சில கற்பணையுடன் அழகாக எவ்வாறு கூற வேண்டும், படிப்பவர்கள், சலிப்பு இல்லாமல் எப்படி கதையுடன் பயணிக்க வேண்டும் என்பதெல்லாம் வரலாற்று நாவலில் மிகவும் முக்கியமானவை. தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான "தீபம்" நா. பார்த்தசாரதி அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினாரா என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறியே. ரங்க கிருஷ்ண முத்து வீரப்பனின் வரலாற்றை வைத்து புத்தகத்தின் ஏறக்குறைய பாதி பயணம் நிறப்பிவிட்டார் . கற்பனை டயலாக் மூலமாக மீதம் கால்வாசி நிரப்பி விட்டார். கடைசி பாதியில் "ராணி மங்கம்மாள் பல நன்மைகள் செய்தாள் " என்பது போல விரிவாக்கம் இல்லாத, கதையுடன் புனையாத, ரசிக்கமுடியாத வகையில் எழுதியுள்ளார்.
படித்து முடித்ததும் "எதற்காக ராணி மங்கம்மாள் அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள்" என்ற கேள்வி எழும் வகையில் தான் இருந்தது இந்த புத்தகம். அதற்கு காரணம் ராணி ஒன்றும் செய்யவில்லை என்பது அல்ல, செய்த பெருமைகளையும், துடித்த துயரங்களையும் 5% கூட உருப்படியாக கூறவில்லை என்பதே காரணம். இந்த புத்தகத்தை படிப்பதற்கு, யூடியூபில் எதேனும் documentary பார்த்து அறிந்துகொள்ளலாம். 15 நிமிடங்களில் நன்றாக கூறி உள்ளனர் சிலர்.
இந்த புத்தகம் சுருக்கமாக "டைம் வேஸ்ட்"
மதிப்பீடு:
ராணி மங்கம்மாள் அவர்களின் பெருமைக்கு 5/5 அதை விவரித்த புத்தகத்திற்கு 1/5
எதிர்பார்ப்புக்கு இரட்டிப்பு ஏமாற்றம் தான் மிச்சம்.