சாதி தேசத்தின் சாம்பல் பறவை எவிடென்ஸ் கதிர்
கதிர் எவிடென்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் அந்த அமைப்பு பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடிய அனுபவத்தை நம்முள் இந்த புத்தகத்தின் மூலம் கடத்துகிறார். சாதி எல்லாஇடத்திலும் உள்ளது கோயில் ,பள்ளிக்கூடம் ,தேனீர் கடை ,அரசமைப்பு ,சுடுகாடு ஏன் மருத்துவமனையிலும் கூட சாதி பார்க்கப்படுகிறது என்று தன் கள ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் கதிர் தலித் மக்கள் எப்படி சுரண்ட படுகிறார்கள் அவர்கள் எப்படி மனிதத்தன்மையற்ற கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்று விவரிக்கும் பொழுது நாம் இப்படிப்பட்ட ஈவு இரக்கம் இல்லாத சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார். என் இட ஒதிக்கீடு சலுகை அல்ல அது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமை என்பதையும் விளக்குகிறார் நம் மக்களின் உரிமை பெற நம் நாட்டின் சட்டம் தான் வழி அதை பயன்படுத்தினால் தான் நம் மக்களுக்கு விடுதலை என்கிறார் கதிர் .
சாதி எப்படியெல்லாம் நம் சமூகத்தில் ஊடுருவி உள்ளது அது எப்படி நம் மக்களை நொறுக்குகிறது என்பதை புரிந்து கொள்ள இந்த புத்தகத்தை படிக்கலாம் .