எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டிமுட்டிப் படைதேடுகிற நிஜம் அது. இந்தவிதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என்மீது கவிகிறது அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்தவிதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்.
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram
நம்மை சுற்றியும் இந்த வீடு போன்ற சிதைவுற்ற வீடுகள் கண்டிப்பாக இருக்கும். ஏன் அந்த குடும்பம் அவ்வாறு ஆனது என்ற கேள்வி என்னை இன்னும் அரித்து கொண்டே இருக்கிறது.
ஒட்டுதல் நம்மை சுற்றி நமக்காக இருக்கும் மனிதர்கள் ஒரு வரம். அதுவே போதும்.
ஆறுவது விரல் ஐந்து விரல்கலையே நாம் கவனம் கொள்வதில்லை , எங்கே ஆறுவது விரலை நாம் கவனிக்கிறோம்...அது தான் இதன் சாரம்...
விதை பரவுதல் மரம், செடி, பறவை இவையாவும் போதும் விதை பரவ... வாழ்வும் இந்த எளிமை தான்..
சில மரம் சில மரம் கொத்திகள் என் மனம் இதை போன்ற மனிதர்கள் தான் ஸ் வாழ்வின் ஆதுரம். உயிர் என்றால் மனிதன் மட்டும் தானா? மரம், இயற்கை, விலங்கு இவையாவும் பேரன்பு...
புத்தக்த்திலருந்து நான் ரசித்தவை
"போகிறதிலே என்ன இருக்கு இருக்கிறதுதானே கெட்டிக்காரத்தனம்"
"ரயில்வே ஸ்டேஷனில் வழியனுப்பப் போனால் முழுரயிலும் நகர்ந்தபிறகுதான் திரும்பி வரவேண்டும்"
"கண்ணாடி என்றால் லேசில் உடைந்து போகவேண்டும் என்று கட்டாயமா என்ன"
"அடுத்தடுத்துச் சொல்வதைவிட, இடைவெளிகளுக்கு அப்புறம் சொல்லப்படுபவை நன்றாகத்தான் இருக்கின்றன. சொல்லை இடைவெளியும், இடைவெளியைச் சொல்லும் கூழங்கல்லாய் உருட்டி ஈரமணலில் ஒதுக்கும் போது ஆறும் அழகு. கரையும் அழகு"
" ஓரு பூதான், ஆனால் உயிர்கவ்வுகிற வாசனை. ' பறிக்கிறதை விட சில பூ உதிர்ந்து கிடந்தால் நல்ல இருக்கும்'"
" எதற்கெடுத்தாலும் ஒரு தடவை சிரித்து கொள்கிற அந்த முகத்தை எனக்கு பிடித்துப்போயிற்று "