புரட்சியாளனான கார்ல் மார்க்சின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்ந்த வாழ்க்கையை இச்சிறு நூலின் மூலமாக பல தவகல்களோடு அறிய நேர்ந்தது. இதில் இருக்கும் 10 கட்டுரைகளில் ஒவ்வொரு கட்டுரைகளின் வாயிலாகவும் அவனின் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை அறிய நேரிடும். மார்க்ஸ் இன் வரலாறை நாம் ஏன் வாசிக்க வேண்டும் இன்று வரையிலும் அவனுடைய தத்துவங்கள் விவாத பொருளாகவும், பல மக்களின் வாழ்வியலாகவும் பின்பற்றத் தான் படுகிறது. இப்படி காலத்தை கடந்து நிற்க அவன் ஆற்றிய பங்கை நாம் கட்டாயம் வாசிக்கத்தான் வேண்டும். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மார்க்சின் வாழ்க்கையின் மூலம் பல பாடங்களை கற்கக்கூடும். இந்த உலகம் எதைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது என அறிய நேர்ந்தது இதுதான் கால் மார்க்ஸின் ஆரம்ப கால தத்துவம்.
என் மனதில் இருந்தவை எல்லாம் இப்படி ஒரு உறுதியான மனநிலையில் ஏன் இவன் இவ்வளவு கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தான் - யாருக்காக வாழ்ந்தான் - அவனுக்காக இல்லை; அவனுடைய மனைவிக்காகவும் இல்லை; குடும்பத்திற்காகவும் இல்லை; அந்த முதலாளிகளிடம் சிக்கித் தவித்து வாழும் அந்த தொழிலாளர்களுடைய வாழ்விற்காக தான். அதற்காக அவன் இழந்தவை ஏராளம், பட்டியல்கள் அடுக்கிக்கொண்டே போகலாம் அதில் சிலவை - நாடு கடத்தப்பட்டான், வறுமையில் வாடினான்(அந்த வறுமையை வாசிக்கும் போதெல்லாம் மனதின் கனத்தை தாங்க முடியவில்லை), அந்த வறுமையில் பிள்ளைகளையும் இழந்தான். இப்படி அவன் இழந்ததை அடுக்கிக் கொண்டே போகலாம் இங்கு நான் குறிப்பிடாதவை பல உண்டு.
அவன் இயற்றிய அறிக்கையின் தத்துவக்கும் இன்னும் அந்த முதலாளித்துவத்தின் ஆதிக்க சக்திக்கு எதிராக பல போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறது. அவனுக்கு உருதுணையாக இருந்த அவனின் நண்பனான ஏங்கல்ஸின் உதவியில் மார்க்ஸின் கருத்துக்கள் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நண்பன் என்பதற்கு இவன் தான் எடுத்துக்காட்டு. மார்க்ஸின் மனைவியான ஜென்னி அவளின் மனஉறுதியும் அவளுடைய தோழமை அவனுடைய வாழ்விற்கு பெரும் உறுதுணையாக இருந்தது. அவ்விருவரின் வாழ்வில் பட்ட கஷ்டங்களையும் வறுமைகளையும் வாசிக்கும் போதெல்லாம் மனதின் கனத்தை தாங்க முடியவில்லை. அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இந்நூலை தொகுத்தவரான வெ.சாமிநாத சர்மா இந்நூலிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை ஒவ்வொரு கட்டுரை வாசிக்கும் போதும் உணர்வீர்கள், அவர் உழைப்பையும் உணரக்கூடும். இவ்வுலகை மாற்றியமைத்த புரட்சியாளர்களின் புரட்சியில் மார்க்ஸின் பெரும் பங்கு இருக்கத்தான் செய்கிறது
Good book to read but reading some tamil words are difficult to pronounce. Other than than if you want to know about core idea of Karl Marx this book is recommended one.