Jump to ratings and reviews
Rate this book

Hitler : Sollappadatha Sarithiram

Rate this book
நாஜி ஜெர்மனிக்குள் இடது காலை எடுத்து வைக்கத் தயாராகுங்கள். 'இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?' என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ப் ஹிட்லர் ! பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலைமுறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனை கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரம்மிப்பை வளர்க்கும் பிறவி-ஹிட்லர் ஒரு சாமானியன் சர்வாதிகாரியாக விஸ்வரூபமெடுத்த சாகசத்தை, சறுக்கி வீழ்ந்த சரித்திரத்தை மட்டும் போவதல்ல இந்த புத்தகத்தின் நோக்கம்

448 pages, Paperback

4 people are currently reading
34 people want to read

About the author

Mugil

31 books50 followers
Mugil, a renowned, best-selling Tamizh writer contributing to various platforms like Weekly Magazines, Books, Television and Cinema. Mugil's works focus on introducing History & Research based Historical content to the current generation of young readers. Born 1980, Native Tuticorin, Tamilnadu and Mugil lives in Chennai.

முகில், முழுநேர தமிழ் எழுத்தாளர். புத்தகங்கள், தொலைக்காட்சி, சினிமா என்று மூன்று தளங்களில் இயங்கி வருகிறார். 35-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சரித்திரத்தை எளிய மொழிநடையில் வலிமையாகச் சொல்லும் இவரது பாணி தனித்துவம் வாய்ந்தது. 1980-ல் பிறந்த இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. வசிப்பது சென்னையில்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (48%)
4 stars
16 (51%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for வெங்கட் பீமசேனன்.
86 reviews1 follower
May 7, 2025
விறுவிறுப்பான நடையில், மிகுந்த நேர்த்தியுடன் ஹிட்லரின் வாழ்க்கையை நமக்கு சொல்கிறார் ஆசிரியர் முகில். வரலாற்று நூலா அல்லது ஒரு காவிய புதினமா என ஐயமுற வைக்கும் அளவுக்கு, தகவல்களையும் உணர்வுகளையும் நன்கு கலந்துச் சொல்லுகிறார்.

இந்த நூலை வாசித்ததன் பின், முகிலின் அனைத்து படைப்புகளையும் தேடிப் படிக்க வேண்டும் என்ற வாசகர் ஆசை தானாகவே பிறக்கிறது. ஹிட்லரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் – அவரது ஏற்றத் தாழ்வுகள், தீர்மானங்கள், பேச்சாற்றல், மற்றும் நாடு மீதான அவரது காதல் – மிக அழகாக, ஆதாரப்பூர்வமாகவும், ஆனால் ஓர் இலக்கியத்தொடரைப் போலவும் விவரிக்கப்படுகிறது.

நாம் வரலாற்றில் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிட்லரின் இருண்ட பக்கங்களைக் காட்டிலும் அவர் ஒரு ஓவியர், ஒரு நாட்டுப் பற்றாளன், ஆகச்சிறந்த பேச்சாளராக இருந்த மனிதரின் பல பரிமாணங்களை இது நமக்குப் பிரதிபலிக்கிறது.

அவர் தனது இறுதிக் கணங்களில் தாயின் புகைப்படத்தை கட்டிக்கொண்டு இருந்த சம்பவம், அவர் தன் தாய்மீது கொண்ட அன்பை நன்கு வெளிப்படுத்துகிறது.

ஹிட்லரின் வாழ்க்கையை முழுமையாக, உருக்கமாக அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு இந்த நூல். வாசிப்பவரை சிந்திக்கச் செய்யும், ஒரு புதிய பார்வையைத் தரும் ஆழமான வரலாற்றுப் பயணம் இது.
Profile Image for Dinesh.
128 reviews9 followers
February 18, 2024
ஹிட்லருக்கு முன்னே பிறந்த மூன்று குழந்தைகளும் சத்துக்குறைவால் இறந்துவிட்டிருந்தன. நான்காவதாக பிறந்த ஹிட்லரும் சத்துக்குறைவுடனே பிறந்தார். இவரும் பிழைக்க மாட்டார் என்றே பெற்றோர் நினைத்திருந்தனர். யாருக்குத்தெரியும் இவர் பின்னாளில் பல லட்சம் யூதர்களை கொல்வார் என்று? யூதர்கள் மீது கட்டற்ற வெறுப்பு கொண்ட இவர், நாய்களை அளவுகடந்து நேசித்தார் என்பது முரண்.

ஹிட்லர் பிறப்பிலிருந்து இறப்பு வரை இவ்வொலிபுத்தகம் அலசி ஆராய்கிறது. சித்திரவதை முகாம்களில் நடைபெற்ற கொடுமைகளை கேட்கும்போது உடல் நடுங்குகிறது.
Profile Image for Yadhu Nandhan.
257 reviews
September 27, 2021
இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கையில் மனம் கனக்கிறது. இப்படிப்பட்ட கொடூரமான செயல்களையும் நியாயப்படுத்தி மக்களை நம்பச் செய்தார் என்றால் ஹிட்லர் எனும் தனி மனிதனின் ஆளுமையை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
Profile Image for Edison Prathip Kumar APK.
199 reviews1 follower
August 5, 2022
I have read/ watched so many books and videos about Hitler, but none gave such a deep incidents about this man!!
A beautiful narration by the tean and last but not the least,
Mr முகில் has done a wonderful job 💪✌️😁
Profile Image for Yoga Mayo.
1 review4 followers
February 22, 2020
Compilation of Hitler’s life and more of WW II events. And about some personal life of Hitler. Worth to if one knows nothing about WW II previously.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.