இரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு - வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை, அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச் சித்திரிக்கும் நாவல் இது.
Cho Dharman (born 8 August 1953) is an Indian Tamil writer. He was born in Kovilpatti Taluk in Tuticorin district of Tamil Nadu. The real name is S. Dharmaraj. Cho Dharman's novel Koogai, a stunning account of Tamil lives in post-independence India, was translated into English as The Owl. Cho, has authored nine books, won several awards and much critical acclaim for his novels, non-fiction and short stories. He won the Sahitya Akademi award in 2019 under Tamil language category for his novel Sool.
சூல் நாவலின் மூலம் சோ. தர்மனின் எழுத்து பரிச்சயம். அதனாலே எதிர்பார்ப்புகளும் அதிகம். தொடங்கிய முதல் 70 பக்கங்களில் சுவாரஸ்யமே இல்லாத வறண்ட அனுபவம். கட்டாயப்படுத்திக்கொண்டு ஒரு வார இடைவேளைக்குப் பிறகு வாசித்தபோது கதையின் உயிர் மெல்ல எட்டிப் பார்த்தது.
வாய்மொழிக் கதைகளின் வலைப்பின்னல் வழியாக ஒரு ஊரின், அதன் மக்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நாவல். இதே உத்தியையே சூல் நாவலிலும் சோ. தர்மன் பயன்படுத்தியிருந்தாலும் அங்கடைந்த வெற்றியும் பக்குவமும் இங்கே work in progress. சூல் வாசித்ததால் ஏற்பட்ட எதிர்பார்ப்புகள் இல்லையெனில் இந்த அனுபவம் மாறுபட்டிருக்கலாம். ஆனாலும் மக்களின் வரலாற்றைப் பதிவு செய்வதில் நல்ல முயற்சி. கதையின் இறுதி 50 பக்கங்களில் பெண் வெறுப்பும் பெண் சுதந்திரத்தை எதிர்த்து எழும் கூக்குரல்களும் மிகவும் பலமாக வெளிப்படுவதை எவ்வாறு எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை - கால மாற்றத்தின் போது கிராமங்களில் காணப்பட்ட உண்மை நிலவரங்களின் சித்தரிப்பா (அப்படியெனில் பெண்கள் மட்டும் தாக்கப்படுவது ஏன்? இதற்கு மட்டும் கதையில் இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?) அல்லது ஆசிரியரின் வெளிப்பாடா எனத் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
அழிந்து போன/அழிந்து கொண்டேயிருக்கும் ஒரு வாழ்க்கைமுறையின் ஆவணமாக, தமிழில் வெளிவந்த நல்ல experimental நாவல்களில் ஒன்றாக முக்கியமானது தூர்வை.
Nomads are glorious when seen through the eyes of Sweden's greatest filmmaker and the Tamil country's most disruptive contemporary writer
In my favourite Ingmar Bergman film "Seventh seal," the movie's quirkiest character Squire Jons describes himself thus: "This is squire Jons. He grins at Death, mocks the Lord, laughs at himself and leers at the girls. His world is a Jonsworld, believable only to himself, ridiculous to all including himself, meaningless to Heaven and of no interest to Hell." Muthiah in S Dharman's Thoorvai is similar - he's a nomad who has no interest in family life, doesn't want to own property, loves roaming around without a care in the world. He survives by eating at weddings, lazing around with friends who love him as they can't stop laughing when he's around. His outlook on life makes him say things like "A person who doesn't own a cow is like a crown-less king, and one without a partner is a Prodigy". But Dharman doesn't judge and doesn't let his characters judge Muthiah. He could be seen as a hero, for he's a rational voice who sees through the everyday bull shit. He too mocks customs, the gods and the ghosts. The book is about how a predominantly lower caste village where all people coexist happily slip into abyss when a factory is built there. The factory though finds its first mention in the 170th page in the 236 leaf book. Dharman's treatment comes from what could be called disgust for existing banal narrative structures, largely the construct of the liberals - whose writings are mostly sadistic and focus on the pains of the oppressed than the crimes of the oppressors. Thoorvai is not a flawless novel. It can get boring, but the style is a political statement. His second book Koogai will tell you that writing an engaging masterpiece comes naturally to Dharman, and he can tell the stories the left have told over ages in a much more engaging way while being sensitive. However, there are some bits both in this book and Koogai which might seem regressive at first glance, but you either see where he's coming from later or its something you can overlook. Also read it for how he's written the female lead Madathi.
கோவில்பட்டி அருகே அமைந்துள்ள உருளக்குடி கிராமம் தான் கதைக்களம். அந்த கிராமத்தை சேர்ந்த மினுத்தான் - மாடத்தி ஊரே போற்றும் தம்பதி. உதவி எனக் கேட்போருக்கு வாரி வழங்கிடும், பசி என வருவோருக்கு விருந்து வைக்கும் பண்பானவர்கள். மாடத்திக்கு பிள்ளை இல்லாமல் போகவே சீனியம்மாளை இரண்டாம் தாரமாக கணவனுக்கு கட்டி வைத்து சில வருடங்களுக்கு பிறகு பெரிய சோலை பிறக்கிறான். சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் அவர்களின் குடும்பமும், செழிப்பான அந்த கிராமமும் கால ஓட்டத்தில் பொழிவிழந்து, பசுமையை இழந்து பொன் விளையும் பூமியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் வெடி மருந்து தொழிற்சாலைகளும் முளைத்து வருகின்றன என்பதே தூர்வை.
சோ.தர்மன் அவர்களை முதன் முறையாக வாசிக்கிறேன். தனக்கென தனியே எழுத்துநடையைக் கொண்டவர் என இவரது எழுத்து குறித்து படித்திருக்கிறேன். அப்படியே இருந்தது. வழக்கமான பாணியை விடுத்து சிறு சிறு வார்தைகளாய் சிதறுண்ட வர்ணனைகள். வட்டாரச்சொற்கள் நிரம்பிய வர்ணனைகள். வாசிப்பதற்கு முதலில் கொஞ்சமே கொஞ்சம் சிரமாகவும் பிறகு அட்டகாசமாகவும் இருந்தது. நாவல் முழுக்க நக்கலும் நய்யாண்டியும் எள்ளலும் எகடாசியும் என அருமையான ஒரு வாசிப்பனுபவத்தை கொடுத்தது நாவல்.
முத்தையா என்கிற காடோடி என ஒரு கதாப்பாத்திரம். மினுத்தானின் தம்பி மகன். சோறு கண்ட இடம் சொர்க்கமென திரிபவன். ஊருக்குள் அவனிடம் சிக்கி அவனது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகாத ஆட்களே இல்லை எனக் கூறும் அளவிற்கு அனைவரிடமும் கலாட்டா செய்து சுற்றி இருப்போரை சிரிக்க வைப்பவன். திருமணத்தின் போது இரவில் கூடி அமர்ந்து ஆம்பிளைகள் சீட்டு விளையாடிக் போது காக்கி உடை அணிந்து கொண்டு போலீசைப் போல விசில் ஊத இருட்டுகுள் ஓவ்வொருத்தனும் விழுந்து ஓடும் படி செய்பவன். பேய் கதையாய் பேசித்திரியும் கிழவனை இரவு நேரத்தில் தனியே சென்று ஊருக்கு வெளியே இருக்கும் இடிந்த மண்டபம் ஒன்றில் வேப்பங்கிளை ஒன்றை வைத்துவிட்டு வந்தால் ஐம்பது ரூபாய் தருவதாக பந்தயம் கட்டி இன்னொருவனும் இவனும் சேர்ந்து கிழவன் தனியே செல்லும் போது பயமுறுத்தி கிழவன் காலோடு கழிந்து மயக்கமடைந்துவிடுகிறான். இது போல பல கலாட்டாக்களை கூட்டாளிகளோடு சேர்ந்து செய்தபடியே இருக்கிறான். பல அருமையான, அசலான கிராமத்து மனிதர்கள் நாவல் முழுக்க வருகிறார்கள்.
உருளக்குடி கிராமத்தில் வாழ்ந்ததை போன்ற ஒரு உணர்வு. அத்தனை அட்டகாசமான எழுத்துநடை. செழிப்பான உருளக்குடி மழைப் பொய்த்து கொஞ்சம் கொஞ்சமாக தன் பொழிவினைப் இழப்பது மனதுக்குள் வேதனையை ஏற்படுத்தியது. நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்.
ஒரு நிலவுடைமைச் சமூகம் தொழில்மய சமூகமாக மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் போது எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் போராட்டங்களையும் சந்திக்கிறது என்பதற்கான உள்ளடக்கமே 'தூர்வை'. அச்சமூகத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வழக்காறுகளையும் வலுவாக நிலை நாட்டுகிறார். செழுமையான ஒரு தலித்திய வாழ்வியலை எடுத்துரைக்கும் ஒரு நாவல். மினுத்தான் உருளக்குடி கிராமத்தின் பண்ணையாருக்கு நிகரான சம் சரியாக இருக்கிறான். பிற சாதி மக்கள் மதிப்புடன் பார்க்கக்கூடிய அளவிற்கு நில புலன்களுடனும், ஒழுக்கத்துடனும் ,உழைப்பாளியாகவும், விவசாய நுட்பங்களை கற்றுணர்ந்த தொழிலாளியாகவும், நேர்மையானவனாகவும் திகழ்கிறான். மனிதனின் மீது எவ்வித சாதிய இழிவையும் மற்றும் அடக்குமுறையையும் கொண்ட தலித்திய வாழ்வின் பக்கத்தை காட்டாமல் ,வாழ்க்கை நீராலும் நிலத்தாலும் எப்படி பரிதாபகரமான நிலையை அடைகிறது என்பதை காட்டுகிறது. ஒரு தலித்திய வாழ்வின் நாவலாக அல்லாமல் சூழலியல் சார்��்து கருத்துக்கள் அமைந்திருப்பது நாவலின் சிறப்பு. இது பேசும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் 1. நிலத்தின் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல். 2. நீர்பங்கீட்டில் நிகழ்த்தப்படும் சமமற்ற தன்மை. நாவலில் பல பெண் கதாபாத்திரங்கள் சமூக ஆண்-பெண் சம உரிமையை காட்டும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு. நூலின் ஆரம்பத்தில் உள்ளிருக்கும் வழக்காடு மொழிகள் வாசிக்க கடினமாய் இருப்பினும் போகப்போக பழகிப் போகும் அமைப்பில் தான் உள்ளது.