செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்
இலங்கையின் பண்டைய வரலாற்றை கூறும் நூல்களில் மகாவம்த்துக்கு அடுத்ததாக முக்கியம் வாய்ந்த நூல் சூளவம்சமாகும்.இந்நூலும் பிக்குகளால் எழுதப்பட்டமையால் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்துவதுடன் மன்னர்கள் பௌத்த மதத்துக்கு ஆற்றிய சேவைகளைப் பற்றியே அதிகம் விவரிக்கின்றது. பௌத்த மதத்தை தவிர்ந்த ஏனைய மதங்களை பொய்யான மதங்கள் என்றும் தன்னை கடவுளாக பிரகடனப்படுத்த்த புத்த பெருமானை கடவுள்களின் கடவுள் என்றும் குறிப்பிடுவது சூளவம்சத்தின் பக்கச்சார்பினை வெளிப்படையாக காட்டுகின்றது.