கந்தசாமிட வீட்ட ஆமி இடிக்க வந்து நிக்க குறுக்க படுத்துகிடந்த கந்தசாமிய தவறணைக்கு கூட்டிக்கொண்டு போக வந்த சுமந்திரன் ஆமியோட போட்டி Deal ஐ ஒரு 10 தரம் வாசிச்சு சிரிச்சிருப்பன். யாழ்ப்பாண பேச்சு வழக்கை எழுத்தில பாக்க நல்லா இருக்கு.ஜே.கே வின் அடுத்த புத்தகமான சமாதானத்தின் கதை வாசிகவேணும் வேளைக்கு.
கந்தசாமியும் கலக்சியும் ❤️ • ஜேகேயின் எழுத்து தனித்துவமானது, ஈழத்து வாசகர்களுக்கு மிக நெருக்கமானதும் கூட. கொல்லைப்புறத்துக் காதலிகள், சமாதானத்தின் கதை புத்தகங்களைத் தொடர்ந்து ஜேகேயின் எழுத்தில் நான் வாசிக்கும் மூன்றாவது படைப்பு இந்த கந்தசாமியும் கலக்சியும். முற்றுமுழுதாக வித்தியாசமான படைப்பு, அதிகம் சிரிக்க வைத்த வாசிப்பு அனுபவம். அறிவியல் விஞ்ஞானமும் சாதாரணமும் கலந்து பல கேள்விகளையும், உலக வழக்க நிலைப்பாடுகளையும் பக்கத்துக்குப் பக்கம் எள்ளி நகையாடும் எழுத்து. கதாப்பாத்திரப் பெயர்த்தெரிவுகளும் யாழ்வாசிகளுக்கே உரித்தான பேச்சுமொழியின் அழகிய சொல்லாடல்களும் கதையை மெருகூட்டுகின்றன. இது போன்ற வாசிப்பனுபவம் தமிழில் அரிதென்றே சொல்லலாம். பாராட்டிற்குரிய புதுமையான முயற்சி. • [“எல்லாமே அபத்தமாயிருக்கு. காலமே ஒரு அபத்தம். இந்தப் பிரபஞ்சம் ஒரு அபத்தம். வரலாறு அபத்தம். மனிதர்கள் ஒரு அபத்தம். எண்ணங்கள், சிந்தனைகள், காதல், காமம், உறவு, பிரிவு, பயணம், பிறப்பு, இறப்பு என்று எல்லாமே அபத்தம்.” —புத்தகத்திலிருந்து]
ஈழத்து நாவலில் அறிவியலுடன் சம்பந்தப்படுத்தி எழுதி இருப்பது ஊக்கப்படுத்தப்படவேண்டியது.கந்தசாமி ஒரு தமிழ் வயதானவராகவும் அவருடன் பிரபஞ்ச தொடக்கம் முதல் முடிவுவரை கம்பியூட்டர் முதல் கரும் பொருட்கள் வரை உரையாடல்கள் அமைத்த விதம் அழகு.குமரன் மற்றும் சோதிலிங்கம் சேரிடம் படித்தவர்கள் அந்த கதாப்பாத்திரத்தை புரிவர்.எலிகள் ஆராட்சியாளராகவும் நாம் ஆராட்சி பொருளாகவும் மற்றும் வளமையான பழக்கங்களை கேள்விக்குட்படுத்துவதும் .நம்பிக்கை இருந்தால் கடவுள் இல்லை என நிருபீப்பது சில புதுமையான கண்ணோட்டம் .கதை முடிவு சஸ்பன்ஸ்.