"சாகித்திய அகாதெமி" விருது பெற்ற மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குங்குமம் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான "கைம்மண் அளவு" மூலம் அவர் தமிழ்ச் சமூகத்திற்கு எழுப்பும் கேள்விகள் வீரியமானவை, காத்திரமானவை.
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
This was the first book of Nanjil nadan I read... Though he himself claims he s not week magazine writer , the content was thought provoking.. In the book "Kaiman Alavu" nanjil nadan throws his experiences and memories with various people which created impression on him. The way nadan narrrates was awesome.. and the best thing I noticed is, he describes a scenario using ancient tamil literature adages like thirukural, naladiyar with proper explanation which helped me greatly to know it's real philosophy. Happy to read this....