நாடு விட்டு நாடு சென்றாலும் சாதி அடையாளம் அவர்களை விடாமல் துரத்திச் செல்கிறது என்பதை மலையக மக்கள் வாழ்வைப் படிக்கும் பொழுது தெரிகிறது.இயற்கை வளங்களையும்,மக்கள் உழைப்பையும் சுரண்டுவதற்கே சாதியத் தூய்மை வழி வகுக்கிறது இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.நானும் நாவிதன் என்பதால் நாவிதத்தின் வரலாற்றைப் படிக்கும் பொழுது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலே ஈழத்தமிழர் மட்டுந்தான் என்று வெகுகாலமாக நினைத்துக் கொண்டிருந்த என்னைப் போன்றோருக்கு மலையகத் தமிழர் பிரச்சினைகளையும் அறிய முடிகிறது.நாவல் சுருக்கம் மிகவும் அருமை.