ஆனா ஆவன்னா - நா முத்துக்குமாரின் கவிதை தொகுப்பு அடங்கிய புத்தகம்
எத்தனையோ புத்தகங்களை படித்தாலும் ஏனோ நா முத்துக்குமாரின் எழுத்துக்கள் எப்பொழுதும் என் இதய கிழிசல்களை தைப்பதாகவே இருந்திருக்கின்றன, இந்த புத்தகமும் அப்படிதான். பல கவிதை வரிகள் என்னை மீண்டும் படிக்க வைத்துக்கொண்டே இருந்தது. இயற்கையையும் காதலையும் கவிதையாய் எழுதியவர்கள் மத்தியில் சக மனிதனின் உணர்வுகளை கவிதையாய் செதுக்கியவர்.
இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சில கவிதை வரிகள்:
-> எக்ஸ்போர்ட்ல வேலை செய்யும் நிர்மலாவிடம் : காதலை வெட்டிகொன்டே இருக்கிறாயே எப்பொழுது தைக்கப் போகிறாய்?
-> நகரம் சுற்றிப்பார்க்கும் போது , உணவகத்தில் கை நீட்ட தண்ணீர் வரும் குழாய்யை அதிசயமாய் பார்த்த அந்த விவசாயி, மதிய வெயிலில் மிதந்து செல்லும் மேகங்களை நோக்கி கை நீட்டி நீட்டி "தண்ணீர் வருமா?" என்று சோதித்து பார்க்கிறார்.
-> கடவுளின் குழந்தைப் பருவ உலகத்தின் சாவியும் கடவுளிடம் இல்லை. அவரது பெற்றோர்களிடமே இருக்கிறது.
-> எல்லா பொது நூலகத்திலும், கடைசிப் பக்கம் கிழிந்த புத்தகங்கள் பெரும் படைப்புகளுக்கு முடிவில்லை என்று சவால் விடுகின்றன.