தோழி என்கிற பெயரில் தன்னுடன் இருக்கும் முகிலின் உண்மை சுயரூபம் தெரியாமல் அவள் சொல்லும் போலி பெண்ணிய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அவளுக்காக தன் தந்தையை எதிர்த்து தனியாக வாழத் துவங்கிய யோகா இக்கட்டான சூழ்நிலையில் இனியனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.
முகில் மற்றும் யோகா இருவரின் மீதும் வன்மத்துடன் இருக்கும் இனியனும் உள்நோக்கத்துடனே யோகாவைத் திருமணம் செய்து கொள்கிறான்.
இவர்கள் இருவரும் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை சரிசெய்து எப்படி இணைகிறார்கள் என்பதைச் சொல்லும் கதை “விடாது விவாஹம்”