வல்வில் ஓரி ❤️ • வேள்பாரியைத் தொடர்ந்து கடேயேழு வள்ளல்களில் இன்னொருவரான கொல்லி மலையின் வேளிர் தலைவன் ஓரியை மையக்கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவலே இந்த வல்வில் ஓரி. தமிழின் ஆளுமையில் வேர்கொண்டு அறம், வீரம், காதல், கொடையென செழுத்து வளர்ந்த நம் இனத்தின் மாண்புகளில் விரிந்து செல்கிறது இப்புதினம். • அசோக்குமாரின் தத்துவம் கலந்த கவிநயமான எழுத்தும் கதையின் போக்கும் விறுவிறுப்பாய் பக்கத்தை நகர்த்திச் செல்ல, காலம் சுழன்று நம்மை சங்ககாலத்திற்கு அழைத்துச் செல்கின்றது. ஓரி தனியே நம்மை வழிநடத்திச் செல்ல, காரியும் அதியமானும் ஆங்காங்கே கதைக்கு வலுவாய் வந்து போகிறார்கள். குடிகளின் இயற்கையோடு இணைந்த அன்பு கலந்த வாழ்வியலும், குலங்களின் வீரமும், அயிராழியின் காதலும் பயணத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. ஒட்டு மொத்தத்தில் கதை ஒரு நல்ல வரலாற்றுப் புதினத்தில் வாழ்ந்த திருப்தியை அன்பளிக்கின்றது எனலாம். • [“ஆளுமையும் பொருளும் நிரம்பியவர்களால் புடவி சுற்றுவதில்லை. உயர்வது அனைத்தும் தாழும். ஆக்கிரமிப்பது அழியும். மனிதனுக்கு ஆறறிவு அளித்தது மற்ற அறிவுகளைப் பேணுவதற்கு. அனைத்து உயிர்களுக்கும் உணவும் மருந்துமாய்ச் செடி கொடிகள் இருக்கின்றன. அவற்றிடமிருந்து விலகிச்செல்கையில் மனிதன் தன்னைக் காக்கும் பேரறிவை இழக்கிறான். அதை அழிக்கையில் தனக்குத்தானே கொள்ளியிட்டுக்கொள்கிறான். இந்த உலகின் நியதி சார்ந்திருத்தல். வாழவைத்து வாழுங்கள்.” —புத்தகத்திலருந்து]