சில பொய்களும் அதனால் உருவாகும் ஏமாற்றங்களும் எவருக்கும் தீங்குவிளைவிக்காது போனால் அது உண்மை என்ற உருவகத்தில் அடைக்கலாம்.
தன்னைச் சுற்றி நல்லவர்களும் நல்லது மட்டுமே என்றால் அதை பெறுபவன் பாக்கியசாலி அல்லாமல் வேறென்ன.........?
குடும்ப வாழ்க்கையில் விட்டு கொடுத்து அனுசரித்துச் செல்வது என்பது அவர்களில் மற்றவர்களுக்குப் பிடிக்காததைச் செய்யாமல் இருப்பதே அதைக் காதலிக்கும் போதே ஆரம்பித்துத் தன் காதலனுக்காகக் காதலை மறைத்து அவனையே கைபிடித்தவளின் கதை இது.
பேங்கில் வேலை செய்யும் ஜெயந்த் தற்போது யாருமற்றவன்.சிறுவயதில் தந்தையை இழந்து அதன் பிறகு தவறான காதலால் அக்காவையும் இழந்து துக்கம் தாளாமல் தாயையும் விரைவிலே பறிகொடுத்து நண்பன் மனோவுடன் தனக்கென ஒரு வட்டத்தை அமைத்து வாழ்பவன்.
தன் ஒரே சொந்தமான பெரியப்பா ஏற்பாடு செய்த பெண்ணைத் தாய் விருப்படி கோவிலிலே மணமுடிக்கச் செல்ல அந்த முகூர்த்தநாளில் ஏகப்பட்ட கல்யாணம் நடப்பதால் குளறுபடியில் சாமி கும்பிட வந்த ப்ரீத்தி கழுத்தில் தாலி கட்டிவிடுகிறேன். இரண்டு பேரும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து இருப்பவர்கள்.
கடவுள் முடிச்சு என்று இந்த அசம்பாவிதத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு நல்லவகையாகவே தொடர்கிறது. திருமணம் முடிந்த ஜோடிகள் ஒருவருக்கொருவர் புரிதலுடன் இல்லறத்தை இனிமையாக்கும் நேரத்தில் ப்ரீத்தி வேலை விஷயமாக அமெரிக்கா செல்ல நேர்கிறது. செல்வதற்கு முன் கடிதமாகத் தன் காதலை எழுதி அவளின் சிறுவயது போட்டோ ஆல்பத்தில் வைத்து விடுகிறாள்.
தன்னை இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றிய ஜெயந்தை காதலிப்பத்தைத் தன் பெற்றவர்களிடம் சொல்ல, அவனுக்குக் காதலே பிடிக்காது என்பதால் அவனின் நண்பன் மனோவுடன் சேர்ந்து ஒரு சின்ன வில்லங்கம் பண்ணி ப்ரீத்தி கழுத்தில் தாலி கட்ட வைத்ததும் அவனுக்கு ஏற்கனவே பார்த்த பெண்ணை அவளின் காதலனுடன் சேர்த்து வைத்ததையும் விரிவாக எழுதி வைக்கிறாள் தன் மனநிம்மதிக்காக.
ஏற்கனவே எழுதிய ஐஏஎஸ் பரிட்சையில் ஜெயந்த தேர்வாகிவிட்டான் என்ற கொண்டாட்டத்துடன் அமெரிக்கா கிளம்புவளுக்கு அங்கே சென்று தனிமை கொல்கிறது. இங்கே டிரைனிங்கில் இருக்கும் ஜெயந்த்துக்குப் பேச கூட நேரமில்லை.எங்கே உண்மை தெரிந்து தன்னிடம் இருந்து விலகிவிடுவானோ என்று பயம் கொள்பவளை தேற்றுவதற்கு வழி தெரியாமல் பெற்றவர்களும் தடுமாற மனைவியைப் பிரிந்து இருந்தவன் கையில் அவள் எழுதிய கடிதம் கிடைத்து அனைத்து காதலும் மற்றவர்களை உருகுலைய வைக்காது என்று தன் மீது காதல் கொண்டவளின் மனதை சரியாகப் புரிந்து கொண்டு தானும் காதல் கொள்கிறான் அவள்மீது.. காதல் மீது வைத்திருக்கும் எண்ணத்தையும் மாற்றிக்கொள்கிறான்.