நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
பரத்சந்திரன் I.P.S, என்று சுரேஷ் கோபி நடித்த படம் ஒன்று. அதில் ஒரு கீழ்மட்ட போலீஸ் அதிகாரி உயர் அதிகாரியிடம், கொலைபட்ட பிணத்தை முதலில் யார் பார்த்தது எனும் கேள்விக்கு வரும் பதில் "வேஸ்ட் பெறக்கான் வந்த தமிழன்மாராணு ஆத்யம் கண்டது" என்று.
கவனியுங்கள், குப்பை பொறுக்க வந்தவன் முதலில் கண்டான் என்று அல்ல. குப்பை பொறுக்க வந்த தமிழன் என்று.
புலியை முறத்தால் அடித்து விரட்டியதும். தேர்க்காலில் சொந்த மகனை ஏற்றிக்கொன்றதுவும். புறமுதுகில் வேல்வாங்கிய மகனுக்கு பாலூட்டிய முலைகளை அறுத்து எறிந்ததுவும். பெய் என்றால் பத்தினிக்கு மழை பெய்ததுவும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளுடன் முன் தோன்றி வந்ததுவும், கடைசியில் பக்கத்து நாட்டில் குப்பை பொறுக்கத்தானா?
42 கட்டுரைகளையும் 360 கோணங்களில் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார் ஆசிரியர். போற்றத்தக்க எழுத்து நடை. சங்கால நூல்கலிலிருந்து எடுக்கப்பட்ட அனைத்து மேற்கோள்களும் அருமை.
The book is a collection of the articles that the author penned in the periodical of the publisher. An interesting read with a lot of sarcasm, satire, strong criticism and interesting points to note. This is first book of this author that I have read. A different perspective and the author's narration and the handling of the language was good. Hope to read his other books too!
நாஞ்சில் நாடனின் படிப்பறிவும், அனுபவமும் நாம் அறிந்தவை. அதனால் கொஞ்சம் நம்பிக்கையையும், ஆக்கபூர்வமான பார்வையையும் எதிர்பார்த்துச் சென்றால், சற்று ஏமாற்றமே.