பெற்றவர்களைத் திருப்திபடுத்தவென்று உண்மையில் தன்னை நம்பி இருக்கும் பெண்ணைக் கைவிடவில்லை என்றாலும் அதை வெளிப்படுத்தாமல் இருந்ததால் வந்த அபத்தங்கள் ஒருவளின் உயிரை பறித்ததும் ஒருவனைச் சன்னியாசியத்தை வாங்க வைத்ததும் தான் நிகழ்ந்து இருக்கிறது. மனிதனுக்கு இருக்கும் பணத்தாசையே இதற்கு முழு முதற்காரணம். காலங்கள் மாறினாலும் இந்த வகைச் சூழல் அப்படியே தான் இருக்கிறது.
தமிழ் மொழியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. எட்டு சிறுகதைகளைக் கொண்டுள்ளது. காலத்தை வென்று நிற்கும் இச்சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் முன்னரே அறிந்தனவாக இருப்பினும் ஐயரவர்களின் எழுத்துநடையும் கதை சொல்லும் திறமையும் இவ்வாசிப்பினை இன்றும் ஒரு சுகமான அனுபவமாக நிலைபெறச் செய்துள்ளது.