“நாளைக்கு என்னை பெண் பார்க்க வர்றாங்க!” சமந்தா சொல்ல, “நீ மேலே படிக்கணும்னு சொன்னே! அதை கை விட்டாச்சாசமா?” “யாரு கை விட்டது? நான் எம்.பி.ஏ. பண்ணத்தான் போறேன்! அப்பத்தான். அடுத்த லெவலுக்கு நான் வர முடியும்! பெரிய கம்பெனில, இப்ப சின்ன வேலை தானே எனக்கு?” “ஏண்டீ, மாசம் நாப்பதாயிரம் சம்பளம் வாங்கறது, சின்ன வேலையா உனக்கு?” “பத்தாதுடீ? தேவைகள் நிறைய இருக்கில்லையா? எனக்கு பேராசையெல்லாம் இல்லை! ஆனா கண்யமா வாழணும் இல்லையா? சொந்த கால்ல நிக்கணும்! அதனால் படிப்பு கொஞ்சம் கூடுதலா இருந்தா நல்லது தானே?” “பையன் ஃபோட்டோ பார்த்தியா? அழகா இருக்காரா?” “ஆம்பளைக்கு என்ன அழகு? நல்ல வேலைல இருக்கார்! கிட்டத்தட்ட எண்பதாயிரம் சம்பளம்! சொந்த வீட்ல தான் இருக்காங்க!” “வீடு இவ