வசீகரன். இந்தக் கதையின் நாயகன்! பெயரில்தான் வசீகரம்! ஆள் சுமார்தான். கொஞ்சம் கட்டை, குட்டையான உருவம். பளிச்சென்ற நிறமெல்லாம் இல்லை! கொஞ்சம் கறுப்பில் சேர்த்திதான். ஓஹோவென்ற பர்சனாலிட்டி இல்லை! இன்ஜினீயரிங் படித்து முடித்ததும் உடனே வேலை கிடைக்கவில்லை ஒரு வருடம் அலைபாய வைத்துவிட்டு, பிறகு ஒரு நல்ல கம்பெனியில் கிடைத்து விட்டது! புத்திசாலி, நல்லகுணம், அறிவு எல்லாம் நிறைய உண்டு. காரோட்டத் தெரியும். நல்ல குரல் வளம். அழகாக பாடத் தெரியும்! மற்றவர்களிடம் இனிமையாகப் பழகி, சுலபத்தில் அவர்களை வசீகரிக்கத் தெரியும்! மது சூதனன் என்ற மது இந்தக் கதையில வில்லன்! வசியின் அக்கா புருஷன்! நல்ல உத்யோகம். கைநிறைய சம்பளம். சொந்த வீடு எல்லாம் உண்டு! ஆளும் பார்க்க, உயரமாக, ந