வீடு கல்யாண பரபரப்பில் களைகட்டி விட்டது! கடந்த ஆறு மாதங்களாக சகல ஏற்பாடுகளும் நடக்கிறது! பட்டாபிக்கு எதை செய்தாலும் அதை திருந்த செய்ய வேண்டும்! செலவை பற்றி கவலைப்படாத மனிதன்! எதை வாங்கினாலும் அது முதல் தரமாக இருக்க வேண்டும்! ஒரு அப்பழுக்கு இருக்கக்கூடாது! கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் பட்டாபி! படிப்பு என்னவோ வெறும் பள்ளிக்கூட படிப்புதான்! சின்ன வயதில் அப்பா இறந்து ஒரு விதவை தாயார், இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகளுடன் குடும்ப பாரம் தலையில் ஏற, பட்டாபி கலங்கவேயில்லை! நண்பர் மூலம் மும்பை வந்து அங்கே பலரிடம் அடிபட்டு, மிதிபட்டு, துறைமுகத்தில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் தன்னை பொருத்திக்கொண்டு, பத்து வருஷங்கī