சுந்தர குருக்களுக்கு நேரம் குறித்து விட்டார் டாக்டர். “உறவுகளுக்கெல்லாம் நீங்க சொல்லிக்கலாம். இனிமே அவர் இந்தப் பக்கம் இல்லை” “நினைவு திரும்புமா டாக்டர்?” மாமி கேட்டாள். “தெரியலைமா! திரும்பலாம். திரும்பாமலும் போகலாம். பக்கத்துலேயே இருங்க!” “அவர் தன்னோட கடைசி நிமிஷங்கள்ல ஏதாவது சொல்ல ஆசைப் பட்டா?” நடேசன் உள்ளே நுழைந்தான். சுந்தர குருக்களின் ஒரே மகன்! இருபத்தியெட்டு வயசு இளைஞன்! எட்டாவதுக்கு மேல் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை! குருக்கள் அவனையும் வைதீகம் படிக்க வைத்து விட்டார். தனக்குப் பிறகு ஆலயத்தைக் கவனித்துக் கொள்ள ஆள் வேண்டுமே என்று அவனை வாரிசாக்கத் தீர்மானித்து விட்டார். கமலம் மாமிக்கு அதில் விருப்பமில்லை! “ஏன்னா! நடேசன் படி