அடுத்த நாளே தன் அப்பாவிடம் பிரச்னையை சொல்லி விட்டாள் அருந்ததி. “அப்பா நான் ஒருத்தரை எட்டு மாசமா காதலிக்கிறேன்!” அப்பா புருவம் சுருக்கினார். அம்மா குறுக்கிட்டு, “நம்ம ஜாதிதானேடீ?” “ஆமாம்மா!” “பையன் யாரும்மா? என்ன செய்யறான்?” “பிஸினஸ் பண்றார். நல்ல வருமானம். எம்.காம். படிச்சிருக்கார்பா!” “குடும்பம்?” “மந்திரி பொன்னம்பலத்தோட ரெண்டாவது பிள்ளை!” “என்னது?” அப்பா தடாலென எழுந்தே விட்டார். “நீங்க பயப்பட வேண்டாம்பா. நாங்க காதலிக்கத் தொடங்கும்போது, அது ஒரு சாதாரண கட்சியாத்தான் இருந்தது. இப்ப ஜெயிச்சு ஆட்சி அமைச்சிருக்கு. அப்பா அமைச்சரா மாறினது சுந்தரை எந்த விதத்திலும் பாதிக்கலை!” அப்பா பேசவில்லை. “ஏன்பா பேசலை? நாங்க அந்தச் சாக்கடைல ஊற மா