காரை விட்டு அந்த மருத்துவமனை வாசலில் இறங்கினார்கள். அப்பா, அம்மா, சாதனா. ஏற்கனவே விவரம் சொல்லப்பட்டதால் சாதனாவையும் அழைத்துப் போனார்கள். அது ஒரு மென்டல் க்ளினிக். அப்பா, அம்மா அனுமதி பெற்று உள்ளே நுழைய, டாக்டர் தேவராஜன் வரவேற்றார். அப்பா டாக்டரின் கடிதத்தைத் தர, படித்தார் தேவா. தொலைபேசியிலும் தகவல் வந்திருந்தது. “கூட்டிட்டு வாங்க!” பெல் அடிக்க, நர்ஸ் ஒருத்தி அழைத்து வந்தாள் சாதனாவை. “விக்னேஷ்! நீங்க இங்கயா இருக்கீங்க?” “ஆமாம் சாதனா! உனக்காக எத்தனை நேரம் காத்துகிட்டு இருக்கேன் தெரியுமா?” “ஏய் நீ யாரு? எதுக்காக எனக்காக நீ காத்துகிட்டு இருக்கணும்?” ஆவேசமாக எழுந்தாள் சாதனா. டாக்டர் கண் அசைக்க, நர்ஸ் சட்டென ஊசி போட்டாள்.