திருமணம் நடைப்பெறவிருக்கும் சமயத்தில் மயங்கி விழுந்த அந்த பெண்ணை கண்டு அனைவரும் 'என்னடா வம்பு இது' என சங்கடத்திலும் 'அச்சோ அந்த பொண்ணுக்கு என்னவானதோ' என்ற பதட்டத்திலும் இருக்க,ஆனால் அதற்கு மாறாக பதட்டம் என்பது சிறிதுமின்றி இலேசான சுழித்த புருவங்கள் தவிர வேறு எதையும் முகத்தில் காட்டாமல் உணர்வற்று விறைப்புடன் அமர்ந்திருந்தான் மணமகன் கோலத்தில் இருந்த விஷ்ணு சௌரியா.ஆனால் மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருந்த அப்பெண் மட்டும் பதைப்பதைப்புடன் "சினா...சினா" என மயங்கி விழுந்திருந்த தன் தோழியின் கன்னம் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தாள்.அவளிற்கு உதவ தன் கரம் கொடுக்க முன் வந்திருந்த ஒரு பெண் மருத்துவர்,அவளை முழுமையாக பரிசோதனை செய்து அம்மாளிகையே கிடுகிடĬ