Jump to ratings and reviews
Rate this book

நாய்கள்

Rate this book
ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம்.

நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள். ஆனால், எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் ‘நகல்கள்’ (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை.

88 pages, Paperback

First published January 1, 1974

8 people are currently reading
94 people want to read

About the author

நகுலன்

14 books16 followers
Nakulan

நகுலன் (இ. மே 17, 2007) தமிழ் எழுத்தாளர். டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். 'எழுத்து' இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.


T. K. Doraiswamy (21 August 1921 – 17 May 2007), also known by his pen name Nakulan, was an Indian poet, professor of English, novelist, translator and short fiction writer, who wrote both in Tamil and English, and is known for his surrealism and experimentation as well as free verse. He served as Professor of English, Mar Ivanios College, Thiruvananthapuram for four decades.

During his literary career which started in his forties, when he started writing in Ezhuthu, a literary magazine founded by C. S. Chellappa, he wrote a novel and six books of poems in English, and nine novels and five books of poems in Tamil. His English work was mostly published under his real name, while Tamil works often appeared under his pen name. He also wrote briefly under the pen name, S. Nayar(?). His symbolic novel Ninaivup Patai Nilakal (1972) is considered a milestone in Tamil literature and established him as an avant garde novelist. His other notable works in Tamil include, Nizhalgal, Naykal, Naveenante Diary Kurippukal, Ezhuthu Kavithaikal, Iruneenda Kavithaikal, Antha Manchal Nira Poonaikutty, and in English, Words to the Wind, 'Non-Being' and 'A Tamil Writer's Journal'

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (29%)
4 stars
10 (32%)
3 stars
8 (25%)
2 stars
3 (9%)
1 star
1 (3%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Anitha.
Author 15 books42 followers
November 18, 2017
ஒரு மனிதனை நாய் என்று சொல்லும்போது அவனுக்கு உண்டாகும் கோபங்களும், மன கொந்தளிப்புகளும், சஞ்சலங்களும், குழப்பங்களும், தெளிவுகளும் பின்பு அவன் அடையும் தத்துவ நிலையையும் நாயை ஒரு படிமமாக வைத்து சொல்லி இருக்கிறார்.

//நவீனனை ஏன் ஒரு நாயென்று சொல்ல கூடாது// என்று கதையில் அதிக முறை வரும் இந்த வரிகள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தன்மையில் ஒலிக்கிறது.

இக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் வெறும் பெயர்கள் மாத்திரமே என்று தோன்றுகிறது. அனைவரும் கதை சொல்பவரின் பிம்பமாகவே தெரிகிறார்கள். அதை போல் எல்லா மனிதர்களின் அடிப்படை குணங்கள் மட்டுமல்ல எல்லா உயிர்களின் தன்மையும் ஒன்றே என்கிறார் ஆசிரியர்.

//விலங்குகளில் இருந்து மனிதனை வித்தியாசப்படுத்தி காட்டுவது சிரிப்பு...// ஒரு மனிதனிடமிருந்து ஒரு மனிதனை வித்தியாசப்படுத்தி காட்டும் மச்சம் போல் ரேகை போல்...இதில் வித்யாசம் என்பது இடத்துக்கு இடம் சூழலுக்கு சூழல் தேவைக்கு தேவை மாறுபடுகிறது... பொதுவில் உயிர்கள் அனைத்தும் ஒன்றே... அனைத்துக்கும் ஒரே விதியே...

ஒரு நாய் - ஒரு மனிதன் - ஒரு மனிதன் - ஒரு நாய் - ஒரு நாய் - ஒரு நாய் - ஒரு நாய் . ஒரு நாய் (ஒரு மனிதன்) - ஒரு மனிதன் (ஒரு நாய்). ஒரு நாய் - மரா மரா மரா ராம ராம...
Profile Image for Kesavaraj Ranganathan.
46 reviews7 followers
February 7, 2022
நாய்கள் - நகுலன்

ஒருசில புத்தகங்களை எடுத்து படிச்சி முடிக்கும் போது நிறைவான ஒரு உணர்வும் இன்னமும் கூட கொஞ்சம் கதையை இழுத்து கொண்டு போயிருக்கலாம் னு தோனும்... ஒருசில புத்தகங்களை வாசிக்கும் போது எதுக்காக எடுத்தோம் னு நமக்கும் தெரியாது, எதுக்காக இந்த புத்தகத்தை எழுதினார்னு அந்த எழுதாளருக்கும் தெரியாது... ஒருசில நூல்கள்ல கதை னு என்ன இருக்குன்னே தெரியாது அதுவாக்குல போயிட்டிருக்கும் நாம ஒருபக்கம் போயிட்டிருப்போம்... இந்த மாதிரியான ஒரு அனுபவத்தை கொடுத்த புத்தகம் தான் நகுலனின் நாய்கள் நாவல்...

என்னவோ சொல்ல வந்து அதைப்பற்றி சொல்லாமல் வேறு எதைப் பற்றியோ நீட்டி எழுதி... வெற்றுச் சொற்களைக் கொட்டி வைத்து அதை நாவல் என்றும் மகத்தான படைப்பு என்றும் கூறி விடுகிறார்கள்... இதில் மகத்தானது என்று கூறும் விதத்தில் ஒரு மண்ணும் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம்...

ஏதோ நான்கைந்து இடங்களில் ஒருசில வரிகள் கொஞ்சம் தெளிவாக இருக்கின்றன... அந்த இடங்களையும் விரல்விட்டு எண்ணி விடலாம்... ஆனால், அதுக்காக மட்டுமே இந்த நாவலை மகத்தான படைப்பு என்றெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது...

வாசிப்பின் மீதே ஒரு வெறுப்பை கொண்டு வந்து தூர நிறுத்திவிடும் வகையிலான படைப்பு இந்த நாய்கள் நாவல்... நாய் குதரிப்போட்ட மாதிரியான ஒரு மொழியமைப்பு... குடிகாரனின் உளரலை அப்படியே பிரதி எடுத்து எழுதியதைப் போன்ற கதையமைப்பு... ஒன்றுமே விளங்காத கதையின் திசை என வாசிப்பவரின் மனதை சஞ்சலப்படுத்திவிடும் தன்மையுடையது இந்த புத்தகம்...

நான் எந்த ஒரு புத்தகத்துக்கும் இந்த மாதிரியான நெகட்டிவ் ரிவ்யூ எழுதியதில்லை... என்னை அந்த அளவுக்கு கடுப்பேற்றிய எழுத்து/புத்தகம் இது... :(
Profile Image for Manikandan Jayakumar.
94 reviews19 followers
January 7, 2018
நகுலனின் நாய்கள் இரண்டு முறை படிக்க முயன்று ஒரு முறை 10 பக்கத்துலயும் , இரண்டாவது முறை 50 பக்கத்துக்கு மேல வாசிக்க முடியாம மூடி வச்சிட்டேன். இப்போ 2018 ல ஒரு வழியப் படித்து முடிச்சிட்டேன். நகுலனைப் படிக்க முடிந்ததே சந்தோசம்.

"ஒருவரை நாய்னு திட்டுனா ஏன் அதை நம்ம வசையா பாக்குறோம்னு" கேள்விக்குப் பதில் தேடியே போகுது.

நாவல் வரும் கதா பாத்திரங்கள் வேற வேற கதா பத்திரங்களா இல்லை எல்லாரும் கதை எழுதும் நவீனன்/நகுலன் கற்பனை மட்டுமா? நவீனன் தனக்கு தானே பேசிகிட்டதா?

"Of course it is happening inside your head, Harry, but why on earth should that mean that it is not real?"

எல்லாரும் ஒரு வகையில நாய்கள் தானோ, நாய்களுக்கு இருக்கிற குணங்கள் மனிதர்களுக்கும் இருக்கவே செய்கிறது.

இந்த நாவலைப் படிக்கும் பொது வார்த்தையால சொல்ல முடியாத ஒரு சந்தோசம். இதையே நாவல்ல நவீனன் சொல்லும் பொது அந்தச் சந்தோசம் கூடுது.

"கலை கலைன்னு நம்ம சொல்றோம் இல்லை. அதுக்கு உள்ள ஆதாரமெல்லாம் எதுன்னு ஓத்தனாலயும் சொல்லமுடியாது - எதுவோ இருந்து உனக்குள்ளே புகுந்து உன்னைத் துளைக்குது"

எனக்குப் பிடித்த ஒரு வரி :

"யாரையும் பதியும், நான் அப்பவே சொன்னேனேன்னு, பின்னே சொல்லிக்காட்டினதில்லை" -
நம்ம வாழ்க்கைக்குத் தான் இந்த வரிகள் எவளோ முக்கியமானது. ஒருத்தன் நம்ம சொன்னதை எடுத்துக்காம தப்பா எதாவது பண்ணிட்டா உடனே நம்ம சொல்ற வாக்கியம். அதைச் சொல்லி காட்டவேண்டிய அவசியம் இல்லையே.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.