5ம் வகுப்பு 2வது வருடம் படிக்கும் சிறுவன் வாசகனிடம் தனது பட்டப் பெயர், பயம், பசி, திருட்டு, புத்தாடை, தூக்கம், சின்ன விளையாட்டு என அவனது எண்ணங்களை பகிரும் ஓரு அழகிய அனுபவம்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
இதில் அந்த சிறுவனாக நான் எஸ்.ரா வை பார்க்கிறேன்.குறிப்பாக கடல் பற்றி அந்த சிறுவன் பேசும் போது கடல் மணலை அந்த சிறுவன் தனது சட்டை பையை நிறைக்கும் போது எஸ்.ரா தேசாந்திரியில் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது...நல்ல புத்தகம்
3ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும்...உங்களுக்கு தெரிந்த குழந்தை யாராவதிருந்தால் இந்த புத்தகங்களை பரிசளியுங்கள்
சிறிய நாவல். ஒரே மூச்சில் வாசித்து விடக்கூடிய நாவல்.
ஒரு சிறுவனின் வாழ்வை (ஐந்தாம் வகுப்பு மாணவன்) அவன் மொழியிலேயே நமக்குத் தருகிறார் எஸ். ரா.
சிறு வயது நினைவுகள் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
சொல்லப்பட்டவை: பள்ளி வாழ்க்கை, அங்குள்ள சேட்டைகள் (ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான பட்டப் பெயர்கள், பிற மாணவரோடு சேர்ந்து பள்ளிக்கு செல்லாமல் விளையாட செல்வது), பசி மற்றும் உணவு வகைகள் மீதான மோகம், சொல்லிய சிறு பிள்ளைத் தனமான பொய்கள், கேட்ட கதைகள், கதைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிறு பிள்ளை விளையாட்டுக்கள், அக்கா தம்பி/அண்ணன் தம்பி உறவு - இவை அனைத்தும் சிறு பிள்ளை மொழியில்/புரிதலில் சொல்லப்பட்டுள்ளது.
இறுதியில் அனைவருக்கும் பொதுவான கருத்தைச் சொல்லி நாவல் முடிவடைகிறது. இதோ அந்த இறுதி வரிகள்: " பெரியவங்க சின்னப் பிள்ளைங்க சொல்ற எதையும் கேட்கக் கூடாதுனு ரொம்ப பிடிவாதமா இருக்காங்க. சின்னப் பசங்களுக்கு என்ன பிரச்சனைன்ன, பெரியவங்க பல விஷயத்தை எதுக்குச் சொல்றாங்கனு புரியலை."
பெரியவர்கள் சிறியவர்கள் என் இரு சாராருக்குமான ஒரு நூல்.