எந்த மருந்தும், மாத்திரையும், மருத்துவரும், இல்லாமல் தனக்குத் தானே சிகிச்சை செய்துகொள்ளும் ஆற்றல் உடலுக்கு இயல்பாக அமைந்திருக்கிறது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் உடலைச் சரி செய்கிறேன், நோய்களை குணப்படுத்துகிறேன் என்று உடலின் இயக்கத்தில் குறுக்கிடும் போதுதான் உடலில் உண்மையான நோயும் பாதிப்பும் உருவாகத் தொடங்குகிறது.
இந்தச் சிறிய நூலின் நோக்கம், உடல், மனம், நோய், மற்றும் மருத்துவம் பற்றிய புரிதலை உண்டாக்குவதும்; நோய்களை எளிதாகக் குணப்படுத்தும் வழிமுறைகளை கை காட்டுவதுமாகும்.