ஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, சமயம், தேசம் முதலியவற்றின் சொல்லாடல்களுடனும் அவற்றின் அதிகார விசைகளுடனும் இணைந்தும் விலகியும் செயல்படுவது அது. பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அதிகார விசைகளையும் அவற்றுக்குச் சவால்விடும் வகையில் சமூகத்திலும் கலையிலும் துலங்கும் பொருண்மையான எதிர்ப்புகளையும் இத்தொகுப்பின் கட்டுரைகள் ஆராய்கின்றன.
மாதொருபாகன் நாவல், பரியேறும் பெருமாள் திரைப்படம், தமிழகம் தாண்டிய பெண்ணெழுத்து, பெண் விரோதச் சாதியக் கொலைகள், பசு அரசியல் போன்ற சமூக, பண்பாட்டு நிகழ்வுகளும் இலக்கியமும் கலையாக்கங்களும் கட்டுரைகளின் பேசுபொருட்கள்.
The reproduction of the duality of masculinity and femininity does not occur in isolation; it works in tandem with the rhetoric of caste, religion and nation.