Aravinthan ID's Reviews > கிருஷ்ணன் என்றொரு மானுடன்

கிருஷ்ணன் என்றொரு மானுடன் by ப.ஜீவகாருண்யன்
Rate this book
Clear rating

by
9262302
's review

really liked it

எம்.டி. வாசுதேவ நாயரின் "இரண்டாம் இடம்" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து "கிருஷ்ணன் என்றொரு மானிடன்" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன் கிருஷ்ணனனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான முழு வாழ்க்கையையும் கூறுகிறது. பீமனை, அர்சுனனை விட சிறந்த வீரராக அபிமன்யுவே கிருஷ்ணனிடம் விளக்கத்துடன் கூறுவது சிறப்பு. அபிமன்யு இறப்பிற்கு மிகுந்த துயர்படும் கிருஷ்ணன், கடோத்கஜன் இறப்பிற்கு கொண்டாடுவது என சுயநல கிருஷ்ணனாக வெளிப்படுகிறார். மொத்தத்தில் கிருஷ்ணனை வீரம் நிறைந்தவனாய், எதையும் பொறுமையுடன் சமாளிக்கும் திறமையுடையவனாய், பெண்கள் மீது அளப்பரிய மோகம் கொண்டவனாய், கீதை உபதேசித்த மகாபாரத கிருஷ்ணனை மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுகிறது.

"இரண்டாம் இடம்" நாவல் மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலனின் அணிந்துரை மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட பல சிறந்த நாவல்களான ம்ருத்தியுஞ்செய, யுகாந்தா, யயாதி, முதலிய மராட்டிய நாவல்கள், யாக்ஞசேனி எனும் ஒரிய நாவல், வங்கமொழி நாவல்கள், இனி ஞான் உறங்ஙட்டே , ரண்டாமூழம் முதலிய மலையாள நாவல், மேலும் பைரப்பாவின் பருவம், தமிழில் எஸ். ராமகிருஷ்ணனின் உப்பாண்டவம் போன்றவற்றை பற்றி அழகாக கூறுகிறார்.
flag

Sign into Goodreads to see if any of your friends have read கிருஷ்ணன் என்றொரு மானுடன்.
Sign In »

Reading Progress

Started Reading
June 8, 2015 – Shelved
June 8, 2015 – Finished Reading

No comments have been added yet.