Haran Prasanna's Reviews > இலங்கை பிளந்து கிடக்கும் தீவு

இலங்கை பிளந்து கிடக்கும் தீவு by சமந்த் சுப்ரமணியன்
Rate this book
Clear rating

by
35322989
's review

really liked it

சமீபத்தில் வாசித்த சிறந்த புத்தகம்.

இலங்கையில் நடந்த போரில் மக்களின் மனநிலை என்ன என்பதை பல்வேறு மக்களிடம் பேசி அதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் சமந்த் சுப்பிரமணியன். இப்புத்தகத்தில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களில் இருந்து, மலையகத் தமிழர்களின் குரல் உட்பட, புலி ஆதரவாளர்களின் குரலும் ஒலித்துள்ளது. சிங்கள அரசின் அட்டூழியங்களையும் புலிகளின் தீவிரவாத அட்டூழியங்களையும் எவ்வித சாய்வும் இன்றி பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

சிங்கள அரசு பயங்கரவாதத்தின் பல்வேறு மாதிரிகளை இப்புத்தகத்தில் படிக்கும்போது ஒரு திகில் திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

தமிழர்களுக்காகத் தொடங்கி தமிழர்களையே ஒழித்துக்கட்டத் தொடங்கிய புலிகளின் குரூரக் கொலைகள் இப்புத்தகத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களை போரின்போது கேடயமாகப் பயன்படுத்தியதை எல்லாம் இப்புத்தகத்தில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்ட அத்தியாயம் நம்மை உலுக்கி எடுக்கிறது.

நிச்சயம் வாசிக்கவேண்டிய புத்தகம். மிக நல்ல மொழிபெயர்ப்பில் தரத்துடன் வெளிவந்துள்ளது.
flag

Sign into Goodreads to see if any of your friends have read இலங்கை பிளந்து கிடக்கும் தீவு.
Sign In »

Reading Progress

Started Reading
January 18, 2015 – Finished Reading
February 12, 2015 – Shelved

No comments have been added yet.