வகுப்பு வாதமும், வகுப்புத் துவேஷமும் நம்மிடம் எங்கே இருக்கிறது? பிராமணர் பிராமணரல்லாதார் என்கிற பிரிவினை யாரிடமிருந்து உண்டா யிற்று? கோவில்களிலும், தீர்த்தங்களிலும், நதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும், வாசம் செய்யும் தெருக்களிலும், ஓட்டல்களிலும், காப்பிக் கடைகளிலும் பிராமணர், பாகுபாடுகளும் பார்ப்பனரல்லாதாராகிய நம்மால் ஏற்பட்டதா? நம்மை யாராவது வகுப்புத் துவேஷி என்றோ வகுப்புவாதக்காரர் என்றோ சொல்ல முடியுமா? பார்ப்பனர்கள் தங்கள் உயர்வையும் ஆதிக்கத்தையும் உண்டாக்கிக் கொள்வதும், நம்மைத் தாழ்ந்த நிலையிலும் இழி தன்மையிலும் இருக்கும்படி செய்வதும் கொஞ்சமாவது குற்றம் என்று அவர்கள் நினைப்பதில்லை. ஆனால்,
...more

