நாம் எதை வெறுக்கிறோம்? எதைத் தடுக்கும்படியும் வெறுக்கும் படியும் மக்களை வேண்டுவதோடு, வெறுப்பதிலும் தடுப்பதிலும் நமது முழு முயற்சியைக் காட்டி, கிளர்ச்சி செய்து அதனால் வந்ததையும் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம் என்றால், இம்மாதிரியான அதாவது படிப்பு, உத்தியோகம், பதவி, தொழில், செல்வம் முதலியவை ஏற்படுவதற்கு நம்மைவிட பார்ப்பனருக்கு உள்ள அதிகப்படியான நீதியற்ற இயற்கைக்கு விரோதமாக நாம் செய்து கொடுத்துள்ள - தனியான அதிகப்படியான - சலுகையை சவுகரியத்தை (Special Previleges) நிறுத்த வேண்டும். அவை அழிக்கப்பட வேண்டும் என்று தான் சொல்லுகிறோம். உதாரணமாக இன்று பார்ப்பனர்களில் வாழ்க்கையின் சகல துறையிலும்
...more

