கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனியம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாம்! எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில், காலேஜில் சேர சேர்த்துக் கொள்ளத் தகுதி உடையவன் (Eligible for College Course) என்று எழுதிக் கையெழுத்துச் செய்து கொடுத்துவிட்டு, காரியத்தில் மார்க்கு பார்த்து, திறமை பார்த்துப் புகுமுகப் பரிட்சை வைத்து சேர்க்க வேண்டும் என்று உத்தரவு போடுவதும், தராதரம் பார்க்காமல் சேர்க்கக் கூடாது என்பதும் பார்ப்பனியமா, அல்லவா? ஏனென்றால், இவை பார்ப்பானின் மூளையில் தோன்றியவைதானே?
...more

