ஆங்கிலத்தில் கேஸ்ட், கிளாஸ் (Caste, Class) என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி, வகுப்பு என்று சொல்வதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது. வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்த ஜாதியில் பிறந்தவனுக்குத் தான் உண்டு பிறக்காதவனுக்குக் கிடைக்கவே கிடைக்காது. மேல் நாட்டில் ஜாதி (Caste) இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை (Class Caste) துவக்க வேண்டிய தாயிற்று. இங்கு ஜாதி (Caste) இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை (Caste, Class) துவக்க வேண்டியதாகும்.

