இந்த நாட்டிலே பார்க்கிறோம் முதலாளி - தொழிலாளி மற்றும் இதுபோன்ற பேதங்கள் இருப்பதை இந்தப் பேதங்கள் மாத்திரமல்லாமல், இன்னும் இதைவிடக் கொடுமையாய், இந்த நாட்டிலே, பார்ப்பான், சூத்திரன், பறையன் என்பதான பிரிவுகள் இருக்கின்றன. மற்ற நாடுகளில் ஏழை - பணக்காரன் என்ற பேதம் இருந்ததே தவிர, பார்ப்பான் - பறையன் என்ற பேதம் அங்கு எல்லாம் இல்லை. ஆனால், இங்கு பணக்காரன் - ஏழை என்கிற பேதத்தோடு மட்டும் இல்லாமல் பிறவியிலேயே உயர்ஜாதிக்காரப் பார்ப்பானும், இழி ஜாதிக்காரப் பறையனும் இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், ஏழை பணக்காரன் என்பது, எப்படிக் கடவுள் அமைப்பு என்று சொல்லப்பட்டு வந்ததோ, அதைப் போலவே இந்த ஜாதி உயர்வு
இந்த நாட்டிலே பார்க்கிறோம் முதலாளி - தொழிலாளி மற்றும் இதுபோன்ற பேதங்கள் இருப்பதை இந்தப் பேதங்கள் மாத்திரமல்லாமல், இன்னும் இதைவிடக் கொடுமையாய், இந்த நாட்டிலே, பார்ப்பான், சூத்திரன், பறையன் என்பதான பிரிவுகள் இருக்கின்றன. மற்ற நாடுகளில் ஏழை - பணக்காரன் என்ற பேதம் இருந்ததே தவிர, பார்ப்பான் - பறையன் என்ற பேதம் அங்கு எல்லாம் இல்லை. ஆனால், இங்கு பணக்காரன் - ஏழை என்கிற பேதத்தோடு மட்டும் இல்லாமல் பிறவியிலேயே உயர்ஜாதிக்காரப் பார்ப்பானும், இழி ஜாதிக்காரப் பறையனும் இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், ஏழை பணக்காரன் என்பது, எப்படிக் கடவுள் அமைப்பு என்று சொல்லப்பட்டு வந்ததோ, அதைப் போலவே இந்த ஜாதி உயர்வு தாழ்வுத் தன்மை கடவுளின் பேரால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முதலாளி என்பவன் பரம்பரை பரம்பரையாக வருபவனல்லன். இன்றைக்கு ஒருவன் முதலாளியாக இருக்கலாம்; நாளைக்கே அவன் இன்ஸால்வென்ட் கொடுத்து பாப்பர் ஆகிவிடலாம். அதுபோலவே, இன்று கஞ்சிக்குத் திண்டாடி யவன் அடுத்த நாள் பெருத்த முதலாளியாக வரலாம். ஆனால், பார்ப்பான் என்பது அவன் உயர் ஜாதிக்காரன், கடவுளுக்கு நேராகத் தந்தி சொல்கிறவன் என்பது பரம்பரை பரம்பரையாக வாழையடி வாழையாக வருவது ஆகும். அழுக்குப் பிடித்த பார்ப்பான் ஆனாலும், குஷ்டம் பிடித்து அழுகிய பார்ப்பான் ஆனாலும், அயோக்கியப் பார்ப்பான் ஆனாலும் பார்ப்பார ஜாதியிலே பிறந்து விட்டதால், அவன் உயர்ந்த ஜாதிக்காரன் ஆகிவிடுகிறான். அவன் மற்றவர் களால் மரியாதை செய்யப்பட வேண்டியவனாகி விடுகிறான். அதேபோல, எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், திறமைசாலியாய் இருந்தாலும், ஒரு ஜாதியில் பிறந்ததாலேயே அவன் பறையன், சூத்திரன், தேவடியான் மகனாகக் கருதப்பட்டு, மேல்ஜாதிக்காரர்களுக்கு கை கட்டிச் சேவகம் செய்து வாழ வேண்டியவனாகக் கருதப்பட...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.