தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும் தமிழர் வீரத்தையும் கலையையும் நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும் ஞானத்தையும் பகுத்தறிவையும் உரிமையையும் இழந்தான். இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும் இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும் ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும், இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.

