விகிதாசாரம் கொடு என்று கேட்பது வகுப்புவாதமானால் விகிதத்துக்கு மேல் அனுபவிப்பது என்ன ஆகும்? அது வகுப்புத் திருட்டு, வகுப்புக் குற்றம், வகுப்பு அயோக்கியத்தனம் தானே ஆகும்? இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழ் மகனின் இந்நாட்டு ஆட்சியை பல்லாயிரம் ஆண்டாக ஆண்டு வந்த தமிழ் மகனை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்நாட்டில் தன் உடலுழைப் பால் இந்நாட்டையே இந்நிலைக்கு அமைத்து இந்நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய உற்பத்தி செய்து மக்களுக்கு அளித்த தமிழ்மகனை இந்நாட்டு ஆட்சி அமைப்பில் தன் விகித உரிமை தனக்கு வேண்டும் என்று அவன் கேட்பது வகுப்புவாதம் என்றால் இந்நாட்டில் அந்நியனின்
...more

