தெருவில் காவாலியாய்க் காலியாய், ஆரிய அடிமையாய், தற்குறியாய், மடையனாய்த் திரிகிறான். திராவிட மிராசுதாரர்கள் மக்கள் எல்லாம் தற்குறியாய் மூட்டை தூக்குகிற நிலைமைக்குப் போகிறார்கள். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? திராவிடன் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறேன். கடவுள் பக்தியென்று கொட்டையும் சாம்பலும் மண்ணும் அணிந்துகொண்டு பார்ப்பான் பின்பாகத்தைப் பார்த்துக்கொண்டு நின்று கும்பிட்டு அவன் கால்தூசியைச் சடகோபமாகக் கொண்டு கடவுள் பக்தனாவது போல்,

