தொழிலாளி பேதம் மட்டுமல்லாமல் முதலாளித் தன்மையில் ஜாதி உயர்வு தாழ்வு பேதம் நடப்பு இருக்கிற போதும், அதைப் பாதுகாக்க ஒரு ஜாதி இருக்கிற போதும், அவர்கள் தொழிலாளர் கிளர்ச்சியை நடத்துகிற போது மார்க்ஸ் சொன்னபடிதான் செய்ய வேண்டும்; லெனின் என்ன சொன்னாரோ அந்தப்படிதான் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? இது சதிகார ஜாதிக்குத்தான் அனுகூலம், மார்க்ஸேதான் தொழிலாளர் பிரச்சினைக்கு முடிவானவரா? அல்லது லெனினே கடைசியானவரா? நாளுக்கு நாள் நடப்பும் கருத்தும் மாறிக் கொண்டே வருகின்றனவே! ஜாதியின் பேரால் தொழிலாளர் சமுதாயம் இருக்கக் கூடாது என்கின்ற கிளர்ச்சியே 1925இல் தானே துவக்கப்பட்டது ? கண்டு
...more

