இந்த நாட்டுக்கு ஏற்ற மாதிரியில் இந்த நாட்டுத் தன்மைக்கு ஏற்ற மாதிரியில் தொழிலாளர் பிரச்சினைகளை அணுக வேண்டும். மற்ற நாடுகளில் நடந்ததுபோல் இங்கும் நடத்த வேண்டும் என்பதும், அந்த முறை யிலேதான் போக வேண்டும் என்பதும் அவசியமற்றதாகும். மற்ற நாட்டிலே இருக்கிற நிலைமை வேறு; இந்த நாட்டு நிலைமை வேறு. அதாவது, இந்நாட்டில் தொழிலாளிகள் என்பவர் பிறவித் தொழிலாளிகள் ஆவார்கள். இப்படிப் பிறவித் தொழிலாளியாக்கி வைத்து, அவர்களைத் தலையெடுக்க வொட்டாமல் மாற்றமடையச் செய்யாமல் பார்த்துக் கொள்கிறவர்கள் மற்றொரு ஜாதியார். அந்த ஜாதிதான் இன்று ஆட்சியிலும் தொழிலாளர் தலைமையிலும் இருந்து வருகிறது. இன்று தொழிலாளர் நலமாக இருவரின்
...more

