எங்களின் விகிதாசாரப்படி எங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால் மத்திய சர்க்காருக்கு உட்பட்ட அவர்களின் ஆட்சிக்குட்பட்ட ரயில்வே, தந்தி, தபால், சுங்கம், இன்கம்டாக்ஸ் போன்ற பெரிய வரிகள், இன்னும் வேறு பல சில்லறை இலாகாக்கள் எல்லாம் நம் கைக்கு வரும் வரையில் நமக்கு விகிதாசாரம் கிடைக்க வேண்டும்.

