நம் நாட்டின் சமூக பொருளாதார நிலையை நன்றாக அறிந்தபின்னும் பணக்காரனை மட்டுமே குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப் பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும் பணக்காரனையும் அதாவது, உழைப்பாளியையும் சுகபோகியையும் உண்டாக்கியிருக்கிறது. உதாரணமாக, இன்றைய சுகபோகிகள் பெரும்பாலும் மேல் ஜாதிக்காரர் களாகவும், பாட்டாளிகள் அல்லது உழைப்பாளிகள் அனைவரும் கீழ் ஜாதிக் காரர்களாகவும் இருப்பதைக் காணலாம்.

