குழந்தைக்கு தலைவலி என்றால் கிரகதோஷம் என்று புரோகிதனும், சாமிதோஷம் என்று அர்ச்சகனும் சொல்லிக் கொள்ளையடித்துக் குழந் தையைக் கொல்லுவது போல் இந்தியாவில் வகுப்புச் சச்சரவு - வகுப்புக் கொடுமை இருக்கிறது. இதற்கு ஒரு வழி சொல்லு என்றால் சுயராஜ்ய மில்லாததால் என்று காந்தியாரும் அந்நிய அரசால் என்று நேருவும் சொல்லி மக்களை ஏமாற்றி தலைவர் பட்டம் பெற்று தேசத்தைப் பாழாக்குவதென்றால், இதை அறிவுள்ள யார்தான் பொறுத்திருக்க முடியும்? என்று கேட்கின்றோம். மற்றும் இவ்வளவு ஜாக்கிரதையாக ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவரவர்கள் மதம், பழக்க வழக்கம், ஆச்சார அனுஷ்டானம், தொழில் ஆகியவைகளைக் காப்பாற்ற உத்தரவாதம் ஏற்றுக் கொண்ட
...more

