100க்கு 3 பேராய் இருக்கும் பார்ப்பனர்கள், இந்த நாட்டுப் பெருங்குடி மக்களை - உழைப்பாளிகளை - தொழிலாளர்களை, பல ஜாதியினராக்கி, ஜாதிக்குள் பல உட்பிரிவினர்களாக்கி, பல மதத்தினர்களாக்கி மதத்திற்குள் பல உட்பிரிவினர்களாக்கி, மதமோ, ஜாதியோ கலந்துவிடக் கூடாது, ஒழிந்துவிடக் கூடாது என்ற போக்கிலேயே கண்ணும், கருத்துமாயிருந்து சாஸ்திரத்தையும், சட்டத்தையும் காண்பித்து, அச்சுறுத்தி அடக்கி வருவதையும், அதனால் இந்த ஒரு மாகாணத்தில் மட்டும், நானூறுக்கு மேற்பட்ட ஜாதிக்காரர்களும், மதக் காரர்களுமாகப் பாட்டாளித் திராவிட மக்கள் பிரிந்து, ஒருவரோடொருவர் கொள்வினை, கொடுப்பினை இல்லாமல், ஒருவர் பார்க்க ஒருவர் உண்ணாமல், ஒவ்வொரு
...more

