தங்களுக்கே ஏகபோக உரிமையாயிருந்த கல்வித்துறை, உத்தியோகத் துறைகளில் விகிதாச்சாரம் என்பதைக் கேட்ட மாத்திரத்திலே அந்த விகிதாச்சாரம் தங்களுக்கு 7,8 மடங்கு அதிகமாகவே இருக்கிறது என்பதைத் தெரிந்தும்கூட அநியாயம்! அக்கிரமம்! அநீதி! என்று கூப்பாடு போட்டார்கள். நீதி, நியாயம், கிரமம் என்பதைத் தாங்கள் பரம்பரையே அறிந்ததில்லை என்பதைத்தான் இந்தச் சம்பவத்திலிருந்து காண்பித்துக் கொண்டார்கள். இது முந்திய நிகழ்ச்சி.

