வைத்தியக் கல்லூரியில் பிள்ளைகள் சேர்க்கும் விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி சேர்க்கப்பட வேண்டும் என்கின்ற உத்தரவைப் பாழாக்க வென்று ஒரு புதிய முறை கண்டுபிடித்து இருப்பதேயாகும். அந்த முறையாவது சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாக மாணவர்களை வகுப்புப் பிரிவு பார்க்காமல் தகுதி பார்த்து அதாவது அதிக மார்க்கு வாங்கின மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு, மூன்றில் இரண்டு பாகமுள்ள எண்ணிக்கையை வகுப்புப்படி கொடுப்பது என்பதாகும். கீழ் பரிட்சையில் தேறி வைத்திய வகுப்பில் சேர்க்கப்பட தகுதியாக சர்ட்டிபிகேட் பெற்ற பிறகு மற்றொரு முறை தகுதி பார்ப்பது என்பது எதற்கு என்று
வைத்தியக் கல்லூரியில் பிள்ளைகள் சேர்க்கும் விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி சேர்க்கப்பட வேண்டும் என்கின்ற உத்தரவைப் பாழாக்க வென்று ஒரு புதிய முறை கண்டுபிடித்து இருப்பதேயாகும். அந்த முறையாவது சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாக மாணவர்களை வகுப்புப் பிரிவு பார்க்காமல் தகுதி பார்த்து அதாவது அதிக மார்க்கு வாங்கின மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு, மூன்றில் இரண்டு பாகமுள்ள எண்ணிக்கையை வகுப்புப்படி கொடுப்பது என்பதாகும். கீழ் பரிட்சையில் தேறி வைத்திய வகுப்பில் சேர்க்கப்பட தகுதியாக சர்ட்டிபிகேட் பெற்ற பிறகு மற்றொரு முறை தகுதி பார்ப்பது என்பது எதற்கு என்று கேட்கின்றோம். இதில் திராவிடப் பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு, ஆரியப் பிள்ளைகளுக்கு இடம் தருவது என்பதல்லாமல் வேறு என்ன கருத்து இருக்க முடியும்? வைத்திய வகுப்புக்கு சேர்க்கப்பட மாணவருக்கு வேண்டிய தகுதி சட்டப்படி அவர்கள் இன்டர்மீடியேட் என்றும் F.A. வகுப்பில் தேறி இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருக்க அதிக மார்க்கும் வாங்க வேண்டுமென்றால் அதற்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு தேவையில்லை என்றே சொல்லலாம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு தகுதியும் வேண்டுமானால் தகுதியானவர்கள் ஏராளமாக இருந்தால் அந்தந்த வகுப்புக்கு வந்த விண்ணப்பங்களில் அதிக தகுதி உள்ளவர்கள எடுக்க முயற்சித்தால் அப்போது அந்த உத்தரவுக்குக் கேடில்லாத தகுதி கிடைக்கப் பெறலாம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்குக் கேட்டை உண்டாக்கும் எந்தத் தகுதியையும் இந்த ஆரிய ஆதிக்கத்தில் ஒழித்தே ஆக வேண்டும் என்போம். ஏனெனில் அது திராவிடர்களை ஒதுக்கவும் ஆரியர்களை நிரப்பவும் வேண்டுமென்றே வஞ்சக எண்ணத்தின் மீதே தகுதி கற்பிப்பதாகும் என்பது நமது அனுபவபூர்வமான க...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.