வைரம், செம்பு, பொன் நகைகள் போடுவது. திராவிடர்கள் 100க்கு 90 பேர்கள் தற்குறி; ஆரியர்கள் 100க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மகாபண்டிதர்கள். திராவிடர்கள் உத்தியோகத்தில் 100க்கு 90 பேர்கள் பியூன்கள், போலீசு, காவலர்கள், தோட்டி தலையாரிகள்; ஆரியன் பிச்சை எடுத்தாலும் அய்.சி.எஸ். ஆரியர்கள் 100க்கு 90 உத்தி யோகங்களில் கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், ஹைகோர்ட் ஜட்ஜுகள் முதலிய பெரும் பெரும் பதவிகள் ஆகிறான். திராவிடன் ஜமீன்தாரனாய் இருந்தாலும் அவன் மகன்

