யானால், கல் தச்சனும், நெசவாளியும் பிராமணனாக முயற்சித்தால் மற்றொரு தொழிலாளி ரிஷியாக முயற்சிக்கிறான். இதன் பயனாய், பிராம ணன் என்பவன் உயர்ந்தவன் என்பதும், ரிஷிகள் என்பவர்கள் உயர்ந்தவர்கள் என்பதும், தேவர்கள் என்பவர்கள் உயர்ந்தவர்கள் என்பதும்தான் நிலைநிறுத்தப் பாடுபட்டதாக ஆகுமேயல்லாமல், தொழில் முறைக்கோ, தொழிலாளி ஜாதி இழிவு என்பதற்கோ யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை.

